பாக்யா கருவுறுதல் சிறப்பு சிகிச்சை மையம் !
Bagya natural Fertility Center
பாக்யா கருவுறுதல் சிறப்பு சிகிச்சை மையம் !
Bagya natural Fertility Center
திருமணமானவுடன் ஒரு வருடத்துக்குள் பெண் கர்ப்பம் ஆவது மருத்துவ ரீதியாகவும் , குடும்ப நலம் ,சந்தோசம் , மன அமைதி இவற்றை தருவதாகவும் இருக்கும் .
ஒரு சில தம்பதியர் பல காரணகளுக்காக கருவுறுவதை தள்ளி வைக்கின்றனர் .வேலை ,படிப்பு, வீடு கட்டுதல் ,வெளி ஊர் பயணம் , குடும்ப வேலைகள் என்று பல . இவற்றால் நேரம் கடந்து ஓர் வருடம் , 2 வருடம் என்று காலம் ஓட கரு வேண்டும் என்று நினைக்கும் பொழுது அது உடனே நடக்காது .வேண்டாம் என்று நினைத்த மனம் பிராண உடலில் ,சரிரத்தில் குழந்தைக்கு எதிராக பல மாற்றங்களை செய்துருக்கும் .
ஒரு சில தம்பதியர் விரைவில் குழந்தை ஆகவேண்டும் என்று திருமணமான முதல் மாதம் தொடங்கி கவலை பட ஆரம்பிக்கின்றனர் . வீட்டில் உள்ள மற்றவரும் ஏன் இன்னும் கரு ஆகவில்லை என்று கேட்டு பெண்ணின் மனதில் அவசரம்,பய உணர்வை கொண்டு வந்து தாம்பத்திய உறவில் அவர்களை நிம்மதியாக ஈடு பட முடியாமல் செய்கின்றனர் .
பூ போல இருந்த தம்பதியரின் உடலும் மனமும் புயல் வந்த பூமியாகி அவர்கள் 3 உடல்களும் மாறி விடுகிறது .
அடுத்த மாதவிலக்கு வந்தவுடன் வீடு மயானம் போல் மாறுகிறது .
ஊரில் எந்த கருத்தரிப்பு மையம் சிறந்தது ?
நல்ல சராசரி நிலைக்கும் உயர்ந்த மருத்துவம் கிடைக்கும் இடம் எது ?
பணம் எத்தனை செலவானாலும் இந்த மாதம் குழந்தை ஆக வேண்டும் என்று அனைவரும் சொல்ல எப்படியாவது கரு தங்கினால் போதும் என்று மருத்துவ மனைகளை தேடி அலைகின்றனர் .
எல்லா ஆஸ்பத்திரிகளும் இவர்கள் உள்ளே போனவுடன் முடிந்த அளவு நல்ல சிகிச்சை கொடுக்க ஆரம்பிக்கின்றனர் .நல்ல மருந்து, ஊசி ,கருப்பை குழாய் டெஸ்ட் , கருப்பை சதை சுத்தம் செய்து டெஸ்ட் ,விந்து டெஸ்ட் என்று பல டெஸ்ட் எடுத்து அதனை ரிப்போர்ட் ரிசல்ட் களையும் அங்கேயே வைத்துக் கொண்டு நல்ல மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்புகின்றனர் .கருவை என்னவோ மாத்திரை பைக்குள் வைத்திருப்பது போல பெண் அதை மிகவும் பத்திரமாக கையாள ஆரம்பித்து மருத்துவரின் உதவியாளர் சொல்லும் செக்ஸ் செய்யும் நாட்களில் மந்திரித்து விட்ட கோழிகள் போல உடலுறவு செய்கின்றனர் .இதில் அன்பு இல்லை, காதல் இல்லை ,காமம் இல்லை ,இன்பம் இல்லை ,துடிப்பு ,பூரிப்பு இல்லை ,சமாதனம் இல்லை,திருப்தி இல்லை .
விந்து வெளியேறி பெண் உறுப்புக்குள் சென்று விட்டதா ?
அப்பாடா என் வேலை முடிந்தது என்று ஆண் நினைக்க , கடவுளே இந்த செக்ஸ் மூலமாவது குழந்தை தங்க வேண்டுமே என்று பெண் வேண்டிக்கொள்ள முடிந்து விட்டது ஒரு வேலை .
ஆனால் எந்த உணர்வும் இல்லாமல் செயப்படும் இந்த செக்ஸ் கற்பத்தில் முடிவதில்லை என்று இப்பொழுது கருத்தரிப்பு மையங்களுக்கு வரும் மக்கள் அளவை பார்க்கும் பொழுதே தெரிகிறது அல்லவா.
இதற்கு அடுத்த கட்டம் தம்பதி செக்ஸ் வைத்தால் குழந்தை ஆவதில்லை என்று முடிவெடுத்து டாக்டர் விந்தை லேப் ல் கொடுங்கள் ,நாங்கள் அதை பக்குவமாக கழுவி ,நல்ல அணுக்களை தேர்வு செய்து அதை எளிதாக கருப்பைக்குள் வைத்து விடுவோம் .இதன் மூலமாவது 100 % கருத்தரிப்பு உண்ட என்றால் ,இல்லை ஒரு முறை செய்தால் அது 10 -20 % தான் . இந்த மருத்துவத்திற்கு 4000 -30 ,௦௦௦ /- வரை ஆகிறது இங்கே தமிழ் நாட்டில் .
இந்த முறை செயற்கை விந்தணு செலுத்துதல் -artificial insemination -என்று சொல்லுவர் .
அடுத்த கட்ட சிகிச்சை இன்னும் விசேஷமான ஒன்று .கணவன் மனைவி செக்ஸ் வேண்டாம் .விந்து எடுத்து கழுவி கருமுட்டை laparoscope கருவி முலம் எடுக்கப்பட்டு லேப் ல் சேர்க்கப்பட்டு 2 முதல் 5 நாட்களில் கருப்பைக்குள் செலுத்தப்படுகிறது .இந்த முறையில் பெண்ணுக்கும் ஆணுக்கும் மருந்துகள் கொடுத்து தயார் செய்தும் கர்ப்ப விகிதம் 30 -40 % அதுவும் சிறப்பான வசதிகள் உள்ள மருத்துவ மனைகளிலேயே !
இப்படி ICSI,GIFT,ZIFT,IUI,ART என்று பலவிதம் .
இந்த முறை மருத்துவம் உலக அளவில் இருக்கிறது .ஆனால் எல்லா மருத்துவ முறைகளும் இந்தியாவிலே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன .காரணம் குழந்தை பேறு இங்கே மிக முக்கியமான ஒரு சாதனை மட்டுமல்ல தேவையும் கூட .இதனால் எப்படியாவது குழந்தை பெற்றால் போதும் என்பதால் துணிந்து செலவு செய்கிறார்கள் . பலன் கிடைக்காத போது ஏமாற்றம் அடைகிறார்கள் .இதற்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவாகிறது .
இது போன்று செலவு செய்து ஏமாற்றம் அடைவதை தவிர்க்க எங்களது பாக்யா கருவுறுதல் சிறப்பு சிகிச்சை மையத்தில் உங்கள் இவருடைய உடல் பரிசோதிக்கப்பட்டு எளிய முறையில் இயற்கையான செக்ஸ் முறைகளால் விரைவில் கரு உண்டாக சிகிச்சைகள் உள்ளன .இதன் முலம் அதிக மருந்து ,ஹார்மோன் ,அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தை பெற்ற தம்பதியர் பலர் .
நிங்களும் இந்த இயற்கை முறை மருத்துவத்தை உபயோகித்து குழந்தை பேறு அடையலாம் .
சிகிச்சை முறைகள்
தந்தை ஆகப் போகும் ஆணுக்கு -
விந்தணு பரிசோதனை ,செக்ஸ் சிறப்பாக செய்ய ஆணுக்கு உறுப்பில் ரத்த ஓட்டம் ,விறைப்பு திசு ஆரோக்கியம் , நீண்ட இன்பமான உறவு மூலம் விந்து முறையாக பெண்ணுறுப்பில் மட்டுமன்றி கருப்பை வாய்க்கு அருகில் விட இயலும் வண்ணம் உடற்தகுதி , நல்ல எண்ணிக்கையுடன் ,வேகமாக ஓடும் தன்மையுடன் கூடிய விந்தணு எண்ணிக்கை ,நிர்த்து போன விந்து தன்மை கெட்டியாகி , மஞ்சள் நிறத்தில் துர்வாடையுடன் இருக்கும் விந்து அழகிய முத்து போன்ற நிறத்துடன் ஆரோக்கிய நிலை அடைய , விறைப்பு செக்ஸ் நடுவில் குறைந்து போவதை சரி செய்து சிறப்பான இனிமையான செக்ஸ் மூலம் மனைவியை திருப்தி படுத்த ,கரு முட்டை வெளிப்படும் 14 ம் நாள் செக்ஸ் செய்ய உண்டாகும் performance anxiety -பதட்டம் நீங்க ,விந்தணு சுய இன்பம் செய்து முக்கியமான நேரத்தில் எடுக்கமுடியாமல் இருப்பது -for test and IUI procedures- ஆணின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அருமையான ,எளிய மருத்துவம் .
தாயகப் போகும் பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை
செக்ஸ் செய்ய பயம் , தயக்கம், கூச்சம் , விழிப்புணர்வு இல்லாமை , கணவன் மனைவி விளையாட்டு இப்படி என்றால் எனக்கு இதெல்லாம் வேண்டாம் , செக்ஸ் செய்தால்தான் கர்ப்பம் ஆகும் என்று தெரியாமல் வெகுளியாக இருப்பது , தொப்புள் செக்ஸ் க்கு உதவும் உறுப்பு என்றும் ஆண் பெண் சேரும் துவாரம் எது என்று தெரியாமல் பல மாதங்களை சும்மா இருந்து வீண் செய்து பின் தவிப்பது , ஆண் உறுப்பு உள்ளே சென்று தன் உறுப்பை கிழித்து விடுமோ என்ற பயம் ,இவ்வளவு பெரிய ஆண் உறுப்பு எப்படி தன் உறுப்புக்குள் செல்ல முடியும் என்று விறைப்பாக உள்ள ஆண் உறுப்பை பார்த்து பயம் , கன்னி திரை கிழிந்து இரத்தம் கொட்டி அவசரநிலை உண்டானால் அதை எப்படி சமாளிப்பது ? , அப்படியே கரு ஆகி விட்டால் பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் வேண்டாம் ,சுக பிரசவம் எனக்கு வலிக்கும் , என் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் இப்படி பல பயங்கள் பெண்ணுக்கு .இவற்றை திருமணம் ஆனவுடனே வந்து ஆலோசனை பெற்று தெளிவது நல்லது .
மாதவிலக்கு அடிக்கடி வருதல் , சரியாக மாதம் ஒரு முறை வராமல் தள்ளி வருதல் ,அதிக உதிரப்போக்கு ,உதிரப்போக்கு குறைவு -ஒரு நாளைக்கு 2 -3 நாப்கின் -முதல் 2 -3 நாளைக்கு -உபயோகிக்கும் வண்ணம் இருப்பது சராசரி -, உதிரப்போக்கு சிவப்பு ,கருஞ்சிவப்பு கலந்த உதிரத்தில் சிறு ஜவ்வு போன்ற திசுக்கள் கலந்து 2-3 நாட்களுக்கு இருக்கும் .பின் மெதுவாக குறைந்து 4 நாட்களில் 95 % ஆகி நின்று விடும் ,இந்த சமயத்தில் லேசான பொருத்துக்கொள்ளக் கூடிய அடி வயிற்று வலி இருக்கும் . அசதி ,வாந்தி , வயிற்று போக்கு ,கால் வலி ,தலை சுற்றல் ,காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு இருக்கும் .
இதில் ஏதேனும் ஒன்று அதிகமாக இருந்தால் அதை வயது வந்த ஒரு சில மாதங்களிலேயே கவனித்து சிகிச்சை பெறுவது நல்லது .
இவை தவிர வெள்ளை படுதல், துர் வாடை கொண்ட மஞ்சள் நிறமான வெள்ளை , அரிப்பு , தொடையில் தோல் கருத்து தடிப்பாக மாறுதல் ,அடிக்கடி தொடையில் புண் ,ஊரல் ,படை ,கொப்புளம் உருவாதல் ,மார்பகங்களில் வீக்கம் ,வலி ,கட்டி ,படை , மாத விலக்கின் போது கட்டி பெரிதாகி கருப்பாக ,வலியுடன் இருப்பது .
கரு முட்டை உருவாகி கட்டி போல் மாறுதல் -called PCOD.
கருப்பை உள்ளே உருவாகும் மெத்தை போன்ற படலம் லேசான ஜவ்வு போல் இருப்பது கரு ஒட்டுவதற்கு ஏற்றதாக இல்லாமல் போகும் .இதனால் எந்த முறை வைத்தியமும் பலன் தராமல் வாட்டும் . இந்த பெண்களுக்கு மாதவிலக்கின் போது உதிரப்போக்கு மிகக் குறைவாகவே இருக்கும் .இதை ஆரம்பத்திலேயே சரி செய்வது அவசியம் இல்லாவிட்டால் அனைத்து ஹார்மோன் சுரப்பிகளும் சரியாத நிலை உருவாகும் .மலட்டு தன்மை இளம் வயதிலேயே கவனிக்க வேண்டிய ஒன்று .பெற்றவர்கள் பெண் திருமணம் ஆனவுடன் எல்லாம் சரியாகும் என்று நினைப்பது தவறு .
மேற்சொன்ன ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பின் பாக்யா கருவுறுதல் சிறப்பு சிகிச்சை மையம் உங்களுக்கு நிச்சயம் உதவும் .
சிகிச்சைகள்
பின் விளைவு இல்லாத மூலிகை மருந்து ,அளவான ஆங்கில மருந்து-தேவை இருப்பின் - ,செக்ஸ் ஆலோசனை ,அக்கு பங்க்சர் ,பிராணிக் ஹிலிங் , ஹிப்னோ தெரபி அடங்கிய முழுமையான சிகிச்சை-
Holistic healing Center
call
07708485038
9003456829